நண்பரின் காரை இரவல் வாங்கி அடகு வைத்த இருவர் கைது..!

கோவை அருகே உள்ள வடவள்ளி, லிங்கனூர் சித்தி விநாயகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31 )இவர் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார் . வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசிப்பவர் அஸ்வின் ( வயது 29 ) இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நாக அஸ்வின் மணிகண்டனின் காரை இரவல் வாங்கிக் கொண்டு குடும்ப சுற்றுலா சென்றார். பின்னர் அந்த காரை அவரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை.இந்த நிலையில் மணிகண்டன் துடியலூர் காவல் நிலையத்தில்புகார் செய்தார் ,போலீசார் வழக்கு பதிவு செய்து நண்பரின் காரை வாங்கி அடகு வைத்திருந்த நாகார்ஜுன் (வயது 29) வடவள்ளி நவாவூர் பிரிவை சேர்ந்த ஜித்தீஸ் ரெட்டி (வயது 21) ஆகியோரை கைது செய்தனர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.