கோவை பீளமேடு அருகே உள்ள எல்லை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (57) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் லேத் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் .இவரது மனைவி கீதா மணி ( 54 ) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக கூட்டரில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கீதாமணி அருகே சென்றுஸ் கூட்டரை நிறுத்தி முகவரி கேட்பது போல நடித்து பேச்சுவார்த்தை கொடுத்தனர் பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் தங்கச் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஒரு கையில் தனது நகையை பிடித்தபடி சத்தம் போட்டார். உடனே வீட்டில் இருந்த செல்வராஜ் வெளியே ஓடி வந்தார். அவர் தனது மனைவியிடம் பெண் ஒருவர்நகை பறிப்பதை பார்த்து பார்த்து கூச் சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 2பேரும் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச்செல்லமுயன்றனர். ஆனால் அதற்குள் பொதுமக்கள் அந்த 2 பெண்களையும்துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை அருகே உள்ள கிறிஸ்தவ ராஜபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி கிருஷ்ணவேணி ( வயது 37 )சங்கோதி பாளையம் பாபுவின் மனைவி அபிராமி ( வயது 36) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி கோவை அருகே தொப்பம்பட்டி, குருடம்பாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதனின் மனைவி லட்சுமியிடம் (வயது 64)இதேபோலகூட்டரில்சென்று முகவரி கேட்பது போல நடித்து 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2பேரை யும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்கூட்டரில் வந்து பெண்கள் நகை பறிக்கும் சம்பவம் கோவையில் முதல் முறையாக அரங்கேறியுள்ளது. அவர்கள் வேறு எங்கும் இதே போன்று நகை பறித்து உள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் ஸ்கூட்டரில் சென்று பெண்களிடம் நகை பறித்த 2 பெண் கொள்ளையர்கள் கைது.
