பரோலில் வெளியே வந்து தலைமறைவான இருவர் கைது..!

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) இவர் கடந்து 2010 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார் .

இதேபோல 2021 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செங்கத்துறையை சேர்ந்த கவுதம் (வயது 29 )என்பவரும் பரோலில் வந்து தலைமறைவாகிவிட்டார் .இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர் .இந்த நிலையில் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.