வால்பாறையில் தொழிற்சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு இரு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைத்து முழு ஆதரவு..!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களை ஒன்று திரட்டி வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதற்க்கான ஆதரவுகளை திரட்டி வருகின்றனர் இந்நிலையில் வியாபாரிகள் சங்கத்தினருடனான ஆலோசனை கூட்டம் தொழிற்சங்க தலைவர்கள் வால்பாறை வீ.அமீது, சௌந்தரபாண்டியன்,யூ.கருப்பையா, மோகன், அருணகிரி, பரமசிவம் மற்றும் வால்பாறை வட்ட வியாபாரிகள் பேரமைப்பு, வால்பாறை வியாபாரிகள் சங்கம், வால்பாறை மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய நிர்வாகிகளுடன் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட தினத்தன்று கடையடைப்பு செய்து தங்களின் முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கத்தினர் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆனால் கடையடைப்பு பற்றி செயற்குழு ஆலோசனைக்கு பின்னர் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த தொழிற்சங்கத்தினர் அதற்க்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்..