கோவை வங்கியில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி.இன்ஜினியர் கைது…

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது. இங்கு இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்துஉள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால்தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பார்வதிவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.விசாரணையில் அவர் கோவை புது சித்தாப்புதுரை சேர்ந்த இன்ஜினியர் மரிய அமுதன் சவரிமுத்து( வயது 32 )என்பது தெரிய வந்தது.அவரை போலீசார் நேற்று கைது செய்தனர் அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்த வங்கியில் கடன் கேட்டு தர மறுத்ததால் கொள்ளையடிக்கமுயன்றதாக கூறியுள்ளார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.