ஐ.டி பெண் ஊழியர் திடீர் மாயம். காதலனுடன் ஓட்டமா?…

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் கிருத்திகா( வயது 24)பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ரோகித் என்பவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தார். இந்த காதல் அவரது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அதை கண்டித்தனர் .இந்த நிலையில் நேற்று கிருத்திகா நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து தந்தை ராஜேந்திரன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் கிருத்திகா தனது காதலுடன் மாயமாகி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.