திருச்சி விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற ஓபிஎஸ். அதிர்ச்சியில் அதிமுக தலைமை…

திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர்மோடி வருகை தந்த போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவி அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றார்கள் இதேபோல தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி லட்சத் தீவில் நடைபெற்ற விழாவிற்கு கலந்துகொள்ள செல்லும்போது, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் தனியாக பேசியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் திருச்சி வந்த பிரதமரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமரை வரவேற்கவும், அவரை வழி அனுப்ப மட்டுமே விமான நிலையம் சென்றேன். டெல்லியில் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என்றார். இந்த சந்திப்பு அரசியல் களத்திலும் அதிமுக தலைமை கழக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.