திருச்சி ஸ்ரீரங்கம் எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் வயது (21) இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வசனங்களை பேசி ரீல்ஸ் செய்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார் இதனைத் தொடர்ந்து நேற்று எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அறிவாலுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவர் அரி வாலுடன் சுற்றித் திரி வதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு
அறைக்கு பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் எட்டரை பகுதி கடைவீதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, முகேஷ் கையில் அரிவாளுடன் சுற்றி திரிவதைக்கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதையடுத்து, அவரை சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த காவல்துறையினர் , அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் நபர்கள் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களைக் கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் பிற விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள் வில்லன் போன்ற தொனியில் பின் இசைகள் கொண்ட பாடல்களுடன் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் ஆகியோரின் விவரங்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹெல்ப்லைன் (help line: 94874 64651) எண்ணிற்கு தெரிவிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் துறையின் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்புக் குழுவானது எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் எனவும், அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.