கோவை மதுக்கரை பக்கம் உள்ள அறிவாளி நகர் அண்ணா சதுர்த்தத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி சுப்புலட்சுமி ( வயது 45) இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் பாண்டிச்செல்வி, மணி ஆகியோரிடம் வாரந்திர ஏல சீட்டு போட்டிருந்தார்.இந்த நிலையில் பணம் செலுத்தியும் ஏல சீட்டு நடத்தாமல், பணத்தைமோசடி செய்து விட்டனர். மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.பணத்தைக் கேட்டபோது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ஒருவர் காயமடைந்தார் இது குறித்து சுப்புலட்சுமி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஏலச்சீட்டு நடத்தி வந்த மகாராஜன் பாண்டி செல்வி,மணி ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
ஏலச்சிட்டு நடத்தி ரூ 2.. 22 லட்சம்மோசடி, பெண்உள்பட 3பேர் மீது வழக்கு…
