மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைவராக நினா சிங் நியமனம்…

வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக உளவுத்துறை அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் பிரிவின் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும்,மத்திய தொழில்துறை பாதுகாப்புத் தலைவராக நினா சிங் நியமிக்கப்பட்டுள்ளர். அப்பதவியை பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் நினா சிங் பெற்றுள்ளார். இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இது தவிர முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.