142 பவுன் வரதட்சனை கேட்டு மனைவிக்கு மிரட்டல்கணவர்-மாமனார்- மாமியார், உட்பட பேர் மீது வழக்கு…

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காரனியை சேர்ந்தவர் மகாராஜன், இவரது மகள் ஸ்ரீ சாய் (வயது 28) இவருக்கும்துடியலூர் ஸ்ரீ பிருந்தாவன் கார்டனைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் 1- 2- 20 21 அன்று திருமணம் நடந்தது.இந்த நிலையில் மேலும் 142 பவுன் நகையும் ,ரு 10லட்சமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி பிரசாந்த்அவரது மனைவியை கொடுமைப்படுத்தினாராம் .அதற்கு அவரது தந்தை ரமேஷ் பாபு, தாயார் ஹேமலதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது .இது குறித்து ஸ்ரீ சாய் கோவை மத்திய பகுதி அனைத்துபெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி கணவர் பிரசாத், மாமனார் ரமேஷ்பாபு மாமியார் ஹேமலதா ஆகியோர்மீது வரதட்சணை தடுப்புபிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.