அடிதூள்!! ஜி -பே, போன்-பே மூலம் இனி ரயில் டிக்கெட் வாங்கலாம்.!!

கோவை;கோவை, போத்தனுார், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உட்பட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில், ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், முன்பதிவு செய்யாத டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நடைமுறை உள்ளது.
இதனால் கவுன்டரில் சில்லரை கொடுப்பதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இப்போது தெற்கு ரயில்வே நிர்வாகம், கியூஆர் கோடு ஸ்கேன் செய்து, பணம் செலுத்தும் நடைமுறையை, அறிமுகம் செய்துள்ளது. பயணிகள் இனி ஜி-பே, போன்-பே, பே-டிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தி, பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இந்த நடைமுறை, தற்போது பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.