கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது .இங்கு நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவை செம்மொழி பூங்காவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!
