சூலூர் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!

கோவை சூலூர் அருகே உள்ள பெரிய குளம் ,சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சூலூர் கிராம நிர்வாக அதிகாரி சுஜி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..