கோவை வடவள்ளி,ஐஓபி காலனி காமாட்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57) பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பல்கலைக்கழக வளாகத்தில் பணியில் இருந்த போது இவரை அங்கு வந்த காட்டுயானை தாக்கியது.இதில் படுகாயம்அடைந்தார் . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்பிராங்க்ளின்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யானை தாக்கி பல்கலைக்கழக காவலாளி பலி..
