கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய
அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு
எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5
சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வில் அசத்திய கோவை அரசு பள்ளி மாணவர்கள்- 73 பேர் தேர்ச்சி..!
