திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்பொழுது விமானங்களில் வரும் பயணிகள் இந்தியாவில் விமானங்கள் மூலம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு ரூபாய்கள் போன்றவை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கத் தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலைய வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் உடைமையில் சந்தேகத்து இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை எடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய சுங்க அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பார்சலை சோதனை செய்து பார்த்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு இந்திய அளவில் சுமார் 5. 56 லட்சம் என்று தெரியவந்துள்ளது.
இதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் பயணியை கைது செய்து விசாரணை செய்து இதற்கு பின் புலனாக யார் இருக்கிறார் என்று சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணிடம் விசாரித்து வருகின்றனர் . திருச்சி விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..