கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை பாராட்டி இஞ்சிப் பாறை வார்டு கழக செயலாளர் சிலுவை முத்து தலைமையில் இஞ்சிப் பாறை மற்றும் நல்லகாத்து எஸ்டேட் பகுதி மக்கள் இணைந்த பாராட்டு விழா நடைபெற்றது .அப்போது தங்க மோதிரம் அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பணி சிறக்க பாராட்டு தெரிவித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், முன்னால் நகரச்செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, தலைமைக்கழக பேச்சாளர் திப்பம் பெட்டி ஆறுச்சாமி, நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியன், உதய நிதி நற்பணி மன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ், நகரச்செயலாளர் சிவா இளங்கோ மணி, கௌரவ தலைவர் மீசை குமார் மற்றும் மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த பாராட்டு விழாவில் 15 வார்டு நகர்மன்ற உறுப்பினரின் பெற்றோர்களையும் கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..