இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா- வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்..!

கோவை: இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் எந்திரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து துவக்கி வைத்தார்.

 

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டதாகவும், ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் இந்தத் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அந்தக் குடும்பங்களுக்கு வழங்குவதாகவும், பெண்கள் சிரமப்படாமலும் இரவிலும் பெண்கள் பயமின்றி குடிநீர் பெற்றுச் செல்ல மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இங்கு விநியோகப்படும் குடிநீர் தினமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதில் வீடு காலி செய்து வேறு பகுதிகளுக்கு சென்று விட்டால். அந்த அட்டை பெற்று பயனடையும் நபர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்குள் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு உரிய இயந்திரம் பொருத்தப்படும். தொடர்ந்து உக்கடம் பகுதியிலும் இன்று திட்டம் துவக்கப்பட உள்ளது. ஒவ்வொரு இயந்திரத்தின் வாயிலாக ஆயிரம் குடும்பம் பலன் பெறும். 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. கோவை மாநகரில் அனைத்து சாலைகளும் குறிப்பாக பிரதான சாலைகள் உட்பட அனைத்தும் மோசமான நிலைகள் உள்ளது. இது குறித்து மாவட்ட பா.ஜ.க சார்பில் விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு இந்த சாலை விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறது. குப்பைகளை கூட மாநகராட்சி சார்பில் எடுப்பதில்லை. மாநகராட்சித் தேர்தல் மக்களுக்கு கொலுசை மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். கரூர் அமைச்சர் கோவையின் பொறுப்பு அமைச்சர் கோவை மக்களை முட்டாள் ஆக்கி வருகிறார். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியாக நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். ஒரு நடமாடும் வாகனம் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையானவற்றை பொதுமக்களுக்கு பதிவு செய்து கொடுத்து வருகிறோம். பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்களை சூயஸ் திட்டத்திற்காக அகற்றுவதாக இருந்தால் இது குறித்து தமிழக அரசிடம் நிச்சயமாக பேசுவேன் என்றார். பாரதிய ஜனதா கட்சியில் பெண்களை தரக் குறைவாக நடத்துவதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கூறிய கருத்துக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன் இது போன்ற புகார்களை விசாரிக்க பாரதிய ஜனதா கட்சியில் தனிப்பட்ட குழுவே உள்ளது என்றும் அங்கே அந்த விஷயத்தை காயத்ரி ரகுராம் கூறி இருக்கலாம் என்றார். அது போன்ற புகார்களுக்கு கட்சியில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இன்றைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.