விஜய் மாநாடு… காவல்துறை கேட்ட 21 கேள்வி… நாளைக்குள் பதில்… தவெக அறிவிப்பு.!!

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன?,

த.வெ.க மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன? மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது?, மாநாடு முடிந்த பிறகு அங்கே இருக்கும் குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது? உட்பட மொத்தம் 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் த.வெ.க தரப்பில் இருந்து பதில் அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தவெக நிர்வாகிகள் சார்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், த.வெ.க பதில் கூறி, அதற்கு காவல்துறை அனுமதி அளித்த பின்பு தான் மாநாடு நடைபெறும். எனவே, அனுமதி அளித்தபிறகு மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..