விஜய் அரசியல்வாதியாகிவிட்டார்… இன்னும் நடிகராகவே பார்க்கும் தொண்டர்கள்- திருமா பேட்டி.!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் கட்டுகோப்பாக இருக்கிற ஒரே அணி திமுக தலைமையிலான கூட்டணி கட்சி மட்டும் தான்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது முதலமைச்சரின் அதிகாரத்தோடு தொடர்புடையது. நீதிமன்றம் அண்மையில் சுட்டிக்காட்டிய விவரங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதன்பிறகு நடிகர் விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் அவரை தற்போதும் ரசிகர்கள் நடிகராகவே பார்க்கிறார்கள். தலைவர் என்கிற முறையில் அவருக்கும் தொண்டர்களை முறைப்படுத்துகின்ற பொறுப்பு இருக்கிறது என்றார். காலப்போக்கில் இன்னும் எல்லாம் சரியாகிவிடும் என்றார். மேலும் முன்னதாக தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்தது ஆனால் அந்த கதவை தான் மூடிவிட்டேன் என்று திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.