கோவையில் விஜய்… உற்சாக வரவேற்பு கொடுத்த த.வெ.க தொண்டர்கள்… ஸ்தம்பித்த விமான நிலையம்.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளார்.

விஜயை வரவேற்பதற்காக கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், ரசிர்கள் என பலரும் குவிந்துள்ளனர். தலைவா தலைவா என கோஷமிட்டு கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். மேளதாளத்துடன் விஜய்யை வரவேற்ற தயாராக உள்ளனர்.கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக விஜய் கோவைக்கு வருகை தருவதால் அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால், கோவை நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு அங்கு குவிந்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியால் வைரலாகி வருகிறது. 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்சி தொடங்கிய வேகத்திலேயே, கட்சி மாநாடு, செயற்குழு கூட்டம் என அடுத்தடுத்து நடத்தி வருகிறது. மேலும், கட்சியை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்டோரை நியமித்து வந்தார். இந்த நிலையில், அடுத்ததாக பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டார். கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27ஆம் தேதி பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

 

அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் குரும்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பூத் கமிட்டி கூட்டம் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜய், 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார். கோவைக்கு வந்த அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிர்கள், தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், கோவையில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.