மும்பையில் விஜய் டி.வி பிரபல தொகுப்பாளினி… ஷாருக் -வீட்டிற்கு சென்ற ஐ லவ் யு சொன்ன ஜில் ஜில் பண்ணிய பிரியங்கா.!!

விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

ஹலோ மக்களே நான் இப்போ மும்பையில இருக்கேன். நீடா அம்பானியோட கல்ட்சுரல்ஸ் செண்டருக்கு போறேன்.

என் ஃபிரெண்ட் சல்மான்கானும், ஷாருக்கானும், என்னை பாக்கணும் சொல்லி எனக்கு மெசெஜ் பண்ணாங்க. நானும் சரி மச்சான் நம்ம மீட் பண்ணலாம்னு சொன்னேன். அவுங்க என்னை பாக்கிறதுக்காக வருவாங்க.. அதனால தான் கொஞ்சம் லிப்ஸ்டிக், மேக்கப் போட்டிருக்கேன் என்று தன்னோட ஸ்டைலில் வீடியோவுக்கு எண்ட்ரி கொடுத்த பிரியங்கா, திருபாய் கல்ட்சுரல்ஸ் செண்டருக்கு போகிறார்.

ஸ்டேஜ்ல இருந்து ஒரு 10 சீட்டு தள்ளி நாங்க உட்காந்துட்டு இருக்கோம், செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனா அறிவு வளக்கிறதுக்கு இந்தமாதிரி செலவு பண்ணும் போது அது ஒரு நல்ல அனுபவம் தான்.

இதைப் பாத்துட்டு என் மொட்டை மாடிலயாவது பிரியங்கா கல்ட்சுரல்ஸ் செண்டர் ஒன்னு நான் ஆரம்பிக்க போறேன். என்ற பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டு, ஆட்டோவில் பாந்தராவுக்கு செல்கிறார்.

பாந்த்ராவை சுற்றிப் பார்த்த பிரியங்கா, அங்குள்ள பிரபல ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு அப்படியே பீச் செல்கிறார்.

மும்பை வந்துட்டேன், ஷாருக்கானை பார்க்கலனாலும், அவர் வீட்டு வாசல்ல நின்னு ஐ லவ் யூ சொல்லாம போயிட்டோம்னா அதுல ஒரு அர்த்தமே கிடையாது. என்று நேராக ஷாருக்கான் வீட்டுக்குச் சென்ற பிரியங்கா நுழைவில் உள்ள சிசிடிவி கேமிராவை பார்த்து ஐ லவ் யூ பச்சா என்று கத்துகிறார்.