விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்… பிரேமலதா அஞ்சலி..

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.