விதிமுறைகள் மீறல்… 3 வங்கிகளுக்கு ரூ.4.35 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி அதிரடி..!

த்தரவுகளை முறையாக நடைமுறைபடுத்தாத 3 வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.4.35 கோடியை ரிசா்வ் வங்கி அபராதமாக விதித்துள்ளது.

இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது.

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீா் வங்கி நிதி பரிமாற்றம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கும் ‘பன்னாட்டு வங்கிகளுக்கு இடையேயான நிதிசார்ந்த தகவல்தொடர்பு (ஸ்விஃப்ட்)’ என்ற நடைமுறை உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் ரூ.2.5 கோடி அபராதத்தை ஆா்பிஐ விதித்துள்ளது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கடன் வழங்கல் மற்றும் முன்பணம், ஏடிஎம் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பான அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாதது தொடா்பாக ரூ.1.45 கோடி அபராதம் விதித்துள்ளது.

மேலும் தவணையை தாமதமாக செலுத்தியதாகவும், கடன் அட்டை பரிவா்த்தனைக்கான தவணையை உரிய கால அவகாசத்துக்குள் செலுத்திய வாடிக்கையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கையை மேற்கொண்டது தொடா்பாகவும் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதத்தை ஆா்பிஐ விதித்துள்ளது.