கோவையில் போக்குவரத்து விதிமுறைமீறல் : ரூ.10 லட்சம் அபராதம் – 941 வாகனங்கள் பறிமுதல்.!!

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் போக்குவரத்து சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபத்து தடுப்பு ” யூ டேர்ன் ” முறை, குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டு செலுத்தாமல் மீண்டும் அபராதம் விதிக்கப்படும்போது அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..இதன்படி போக்குவரத்து விதிகளை மீறிய கார், இருசக்கர வாகனம், வேன் உள்ளிட்ட 941 வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தப்பட்ட பின்னர் 901 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ 10 லட்சத்து 15, ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து இதுபோன்று தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவையில் உள்ள சேதமான சாலைகள் சீரமைப்புக்கு மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்..