அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.
சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.மேலும் ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேலும் ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. இதில் 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 2900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 650 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு விடுதலைக்குப் பின்னர் பழங்குடி மக்கள் முதல் முறையாக வாக்களிக்கும் வகையில் 126 கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 765 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது.இந்த நிலையில் மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்ற அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நீண்டநேரம் காத்திருந்தார். இதன் பின்னரும் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.