இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது உடல்நிலை பற்றி கேள்விப்பட்டு தொண்டர்கள் பதற்றமடைந்தனர். தேமுதிக நிர்வாகிகள் பலரும் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பாக குவிந்தனர். இதனையடுத்து மியாட் மருத்துவமனை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழத வண்ணம் உள்ளனர் .அதன்பின் அவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரையுலகை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கு வருவதற்கு முன்பே விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை கொடுக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். விஜயகாந்தி