இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் – அமைச்சா் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு..!

இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி பேசுகையில், மொழிக் கொள்கைக்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகத் தவறுதலாகக் கூறிவிட்டாா்.

அப்போது, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியது:

மொழிக் கொள்கையை குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளதாக ஜி.கே.மணி கூறினாா். மொழிக் கொள்கையை ஆராயக் குழு அமைக்கவில்லை. மாநிலக் கல்விக் கொள்கையை ஆராயத்தான் குழு அமைக்கப்பட்டது. மொழி கொள்கையைப் பொருத்தவரை திமுக அரசு இருமொழிக் கொள்கைதான் என்பதில் திடமாகவும் உறுதியாகவும் உள்ளது. மொழி விவகாரத்தை ஆராய குழு அமைக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை என்றாா் அவா்.