கோவைகுனியமுத்தூர் சிறுவாணி நகர், நிர்மலா மாதா கான்வென்ட் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் நாராயணன் என்ஜினியர் .இவரது மனைவி விஜிலா (வயது 51 தீபாவளி தினத்தன்று இவரது வீட்டின் முன் இருந்த செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்கண் இமைக்கும் நேரத்தில் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதே போல குனியமுத்தூர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி வசந்தா ( வயது 64)ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அதே நாளில் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினைஇதே கும்பல் கொள்ளையடித்து சென்றது. .இதேபோல மதுக்கரை பகுதியிலும் ஒரு பெண்ணிடம் இவர்கள் கொள்ளை நடத்தியுள்ளனர்.இந்த வழிப்பறி வழக்கில் துப்பு துலக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம் மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் அந்த கொள்ளையர்கள் கேரளாவில் இருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.இதை யடுத்து கேரளாவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கோவை போலீசார் ஆய்வு செய்தனர்.மொத்தம் 350 கேமராக்களில் ஆய்வு செய்துள்ளனர்.இதில் கொள்ளையர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்தது .இதை யடுத்து 3 கொள்ளைகளையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை நடத்திய கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்த ரோஷன், நிஜாம், பிஜு ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டது.இவர்கள் மீது கேரளாவிலும் கோவையிலும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த கொள்ளை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கிய தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,துணை போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆகியோர் பாராட்டினார்கள்.