சபாஷ்!! 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவர்கள்… சாதனை படைத்த அரசுப் பள்ளிகள்..!

டந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு, 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் 37,00க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, பெற்றோர் மத்தியில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை அரசு பள்ளிகளில் சுமார் 42 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தற்போது மாணவர் சேர்க்கை மந்தமாக இருந்தாலும், எதிர்வரும் நாட்களில் கூடுதல் மாணவ, மாணவிகள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.