ற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக பல இடங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முக்கிய ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பின் 697 வாக்குச் சாவடிகளில் ஜூலை 10ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தோதல் ஆணையம் வெளியிட்ட அறிவித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதிக அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அங்கு 174 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் காலை 7 மணிக்குத் தொடங்கும் மறுவாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவுக்கு வரும்.
வாக்குப்பதிவு நாளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 15 பேர் பலியானார்கள். முர்ஷிதாபாத்தில் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கள்ள ஓட்டு பதிவு, வன்முறை காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக, காங்கிரஸ், ஐஎஸ்எஃப் கட்சிகள் சார்பிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளதாவும், அப்போது மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் நடந்த வன்முறை மற்றும் கள்ள ஓட்டு போடப்பட்டது பற்றி எடுத்துரைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, சனிக்கிழமை 80.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.