அரசு அமைத்துள்ள மையங்களில் கோதுமை மாவு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலால் அண்மையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மாவு வழங்கும் மையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கடுமையாக தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. காவல்துறை அதிகாரி ஒருவர், பொது மக்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அந்நிய செலாவணி இருப்பு மிகவும் குறைந்துள்ளதால் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கடன்களை வாங்கியே தனது நிதிநிலையை சரி செய்ததால் கடன் அளவும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக, ராணுவத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவ வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட சரியான முறையில் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உடனடியாக செயல்படாவிட்டதால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என கடந்த வாரம் உலக வங்கி எச்சரித்திருந்தது.