நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர்.
சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாக்கிய பாஜக புள்ளி வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி
பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் இருக்கும் கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் உள்ளது.
கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டி என்பது பல வீடுகள் இருக்க கூடிய பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் சொசைட்டி ஆகும். இங்குதான் பெண் ஒருவருக்கும், ஸ்ரீகாந்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த சொஸைட்டியில் சில இடங்களில் மரக்கன்றுகளை நட ஸ்ரீகாந்த் தியாகி முயன்று உள்ளார். ஆனால் இவர் சொசைட்டி விதிகளை மீறி மரக்கன்றுகளை தவறான இடங்களில் நடுவதாக பெண் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இது பெரிதாக வெடித்த நிலையில், தியாகி திடீரென அந்த பெண்ணின் முகத்தில் கையை வைத்து தள்ளிவிட்டது பெரிய சர்ச்சையானது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து தியாகி மீது அந்த பெண் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தியாகி அதற்குள் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இணையத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் மக்கள் பலரும் முதல்வர் ஆதித்யாநாத்தை டேக் செய்து கேள்வி எழுப்பினர். உங்கள் கட்சிக்காரர் ஒரு பெண்ணை தாக்கி இருக்கிறார். இவர் மீதெல்லாம் ஆக்சன் எடுக்க மாட்டீர்களா? இவர் வீட்டுக்கு எல்லாம் புல்டோசர் போகாதா? சொல்லுங்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் நேற்று தியாகி ஆட்கள் அந்த பெண் இருக்கும் சொசைட்டிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.
அந்த சொசைட்டியில் பல வீடுகள் உள்ள நிலையில் 50க்கும் மேற்பட்ட தியாகி ஆட்கள் அங்கு கும்பலாக சென்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் அங்கே வந்து கும்பலை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்தான் அந்த சொசைட்டியில் உள்ள தியாகியின் கட்டிடத்தை இன்று மாவட்ட நிர்வாகம் புல்டோசர் உதவியுடன் இடித்தது. நொய்டா மாவட்ட மேஜிஸ்டிரேட் சுஹாஸ் எல் தலைமையில் இன்று தியாகிக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது.
கிராண்ட் ஓமாக்ஸ் கட்டிடத்தில் இருக்கும் தியாகிக்கு சொந்தமான கட்டிடத்தை மட்டும் மாஜிஸ்திரேட் இடிக்க உத்தரவிட்டார். அத்துமீறி, விதிகளை மீறி அவர் கட்டிடத்தை கட்டி இருப்பதாக கூறி இந்த ஆக்சன் எடுக்கப்பட்டுள்ளது. இதையயடுத்து அம்மாநில முதல்வர் ஆதித்யாநாத்தை பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள். அதன்படி தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்களை யோகி தண்டிப்பார். பாருங்கள் இவரை பாஜக என்று பலரும் சொன்னார்கள்.
ஆனாலும் அவர் மீது யோகி ஆக்சன் எடுத்துள்ளார் என்று பாராட்டி உள்ளனர். அதே சமயம் தியாகி பாஜக கிடையாது என்று மாநில பாஜக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தியாகி பாஜகவை சேர்ந்தவரே கிடையாது என்று அவர்கள் விளக்கி உள்ளனர். இருப்பினும் தியாகி பாஜகவில் இருப்பதாக வெளியான, பாஜகவின் முந்தைய அறிக்கைகள், செய்தி குறிப்புகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.