தேங்காய் பறித்த போது மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி..

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அருகே உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்( வயது 61 ) கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது திடீரென அவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (வயது 19) . இவர் கோவை ஆர்.எஸ்.புரம் சின்ன எல்லை வீதி பகுதியில் தங்க நகை பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது தாயார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.‌ இதை அறிந்த சுஜித் மைட்டி மன வேதனையுடன் இருந்து வந்தார். இது குறித்து அவர் தனது சகோதரர் சுதீப் மைட்டி என்பவரிடம், தனது அம்மா பற்றி கூறி புலமபி வந்தார். அவருக்கு அவரது அண்ணன் ஆறுதல் கூறி வந்தார். சம்பவத்தன்று அவரது அண்ணன் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த மைட்டி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ஆர் .எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.