கோவை தெலுங்கு பாளையம் சொக்கம்புதூர் .ஜீவா பாதையை சேர்ந்தவர் முருகன் (வயது 65) இவர் கடத்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பழனி கோவிலுக்கு தைப்பூசத்துக்கு சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக முருகனிடம் தகவல் கொடுத்தார் .வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 17 கிராம் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து முருகன் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
பழனி தைப்பூசத்துக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை..!
