கோவை, சித்தாபுதூர் ஜவகர் நகர், புதியவர்நகர் ஆகிய இடங்களில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் சாலையோரங்களில் நிறுத்திவிட்டு இரவில் தூங்க செல்கின்றனர். சில வாரங்களாக நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதியில் வரும் மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை பாட்டிலில் திருடி செல்கின்றனர். புதியவர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபரை சிலர் மடக்கிப் பிடித்தனர் ஆனால் அந்த வாலிபர் தன்னை பிடித்தவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். மேலும் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் இந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
என்ன இப்படி கிளம்பிட்டாங்க… இரவில் வாகனங்களில் பெட்ரோல் திருடும் மர்ம நபர்கள்- கோவை மக்கள் அதிர்ச்சி..!
