குற்றவாளி காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சராமாரி கேள்வி

சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிம்னறம் சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் ஆய்வு செய்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவு ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் பதிவு வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை காவல்துறை ஆணையர், அருண் கூறியிருந்தார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், மாணவி பாலியல் தொல்லை, மற்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள், போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? புலன் விசாரணை அதிகாரி, காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, இந்த பாலியல் புகாரில் ஞானசேகரன் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் காவல் ஆணையர் கூறினார். கைதான ஞானசேகரன் ஆளுங்கட்சி நிர்வாகி அல்ல. உடனடி கைது நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டாமல் 3வது நாள் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்? பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் காவல் ஆணையர் அரசு அனுமதியை பெற்றாரா? கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.