கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் விக்ரமன் ( வயது 65 )பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி சுசிலா (வயது 60) இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது . விக்ரமனுக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 25- 10 – 2022 அன்று விக்ரமன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் சுசிலா வீட்டு கதவை திறக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்ரமன் தொடர்ந்து கதவைத் தட்டியதும், சுசிலா கதவை திறந்தார் .உடனே விக்ரமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசிலாவை சரமரியாரியாக குத்தினார் .இதில் சுசிலா படுகாயம் அடைந்தார். இது குறித்து போத்தனூர் போலீசில்புகார் செய்யப்பட்டது .இதன் அடிப்படையில் போலீசார் கொலை முயற்சிவழக்கு பதிவு செய்து விக்ரமனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி மனைவியை கத்தியால் குத்திய கணவர் விக்ரமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிசா ஆஜராகி வாதாடினார்.