கோவை அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம்..

கோவை அருகே உள்ள மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம்,ஐஓபி காலனி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற மனோஜ் என்ற வாலிபரை துரத்திச் சென்று தாக்கியது..இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பிறகு அந்த யானை காட்டுக்குள் சென்று விட்டது. வனத்துறையினர் முகாமிட்டு யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது..