மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,
மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார் !!!
“மோடி மகள்” திட்டத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, வடகோவையில் உள்ள குஜராத்தி சமாஜில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,
தந்தையை இழந்த, 5 வயது முதல் 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை வழங்கினார்.
50 பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.
150 பெண் குழந்தைகள் பயனடைந்து உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மோடி மகள் திட்டம் செயல்பட்டு வருகிறது. தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 5 முதல் 12 வயது வரை உள்ள வறுமைகோட்டிற்கு கீழே இருக்கின்ற பெண் குழந்தைகளை தத்து எடுத்து, ரூபாய் 10,000 அவர்களுடைய கல்வி செலவிற்க்காகவும், ஆரோக்கியத்திற்க்காகவும், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அவர்கள் படிப்பது, மனநல ஆலோசனை மற்றும் அவர்கள் குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதற்க்காக நாங்கள் பல்வேறு வகையில் உதவி கொண்டு இருகிறோம்.
50 பெண் குழந்தைகள்
இன்று புதிதாக 50 பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைத்து இருகின்றோம். இவை மட்டும் இல்லாமல் தீபாவளியையொட்டி அந்த குழந்தைக்கான புத்தாடை, இனிப்புகள், அந்த குழந்தையின் தாய்க்கு புத்தாடைகள் என்று தீபாவளியை அவர்கள் ஒரு சந்தோஷமான நிகழ்வாக கொண்டாடுவதற்கு தேவையான உதவிகளை அவர்களுக்கு இன்று ஏற்பாடு செய்து இருகின்றோம். குழந்தைகளின் திறமைகளை கண்டுபிடித்து அதற்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் வருடம் முழுவதும் அவர்களுடைய நலம் காத்து அவர்களை பேணி காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மது பாதிப்பு
இங்கு உள்ள பெண் குழந்தைகளின் தந்தையின் இறப்பிற்கு காரணமாக இருப்பது 90 % சதவீதம் மதுவினால் எனவும் மதுவின் கொடுமையால் இளம் வயதில் தந்தை இறப்பிற்கு காரணமாக இருக்கிறது. இளம் வயதிலேயே பெண் குழந்தைகளின் கல்வி தடைபட்டு போகிறது. என்பதற்க்காக இந்த திட்டத்தை நாங்கள் துவக்கி உள்ளோம். ஆனால் தமிழக அரசு தொடர்ச்சியாக மது கடைகளை திறந்து வருகின்றது. ஒரு புறம் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க கூடிய முதல்வர் மது கடையை திறந்து வைத்து நாட்டின் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்க அதிகப்படுத்தி கொண்டு இருக்கிறார். போதை பொருளுக்கு எடுக்கின்ற உறுதிமொழி என்பது வேறும் கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக நாங்கள் பார்க்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று பார்க்கும் போது அவர்களுடைய வேதனை, துயரம் இதனை அறிந்து கொள்ளாதவராக தமிழகத்தின் உடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். மது பழக்கத்தாலும், மது கொடுமையால் இறக்கின்ற குறிப்பாக 40 வயதிற்கு கீழ் ஆண்களுடைய குடும்பத்தை பராமரிக்கின்ற பொறுப்பை இந்த மது கடைகளை நடத்துகின்ற மாநில அரசு தான் ஏற்று கொள்ள வேண்டும். அந்த மனைவிகளுக்கான நல்ல வேலை குழந்தைகள் படிப்பு, பராமரிப்பு செலவு அரசாங்கமே ஏற்கின்ற நிலைமை ஏற்படுத்த வேண்டும். பாரதிய ஜனதா கட்சி குரல் கொடுக்கும். பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி என்ற முறையில் இது போன்று இருக்கின்ற குடும்பத்திற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். என்பது எங்களது கோரிக்கை.
*105 குழந்தைகள் பலன் *
கடந்த இரண்டு ஆண்டுகளாக 105 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் தத்தெடுத்து உதவிகள் செய்து கொண்டிருந்தோம் இன்று புதிதாக 50 குழந்தைகளாக எண்ணிக்கை அதிகரித்து உள்ளதகாவும்,
மது கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை ஆனால் குறைந்த பட்சம் தீபாவளிக்கு குடும்பம் நிமதியாக இருக்க வேண்டும் என்றால் பண்டிகையொட்டி மூன்று தினங்கள் ஆவது மூட வேண்டும்
தமிழ்நாட்டில் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த இலக்கை அனைத்து பகுதிகளுக்கும் நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் சாலை அமைத்தோம், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கழிப்பறைகள் அமைத்துக் கொடுத்தோம், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சுகாதாரமான வாழ்விடத்தை ஏற்படுத்தி கொடுக்கிறோம். என்கின்றது இலக்காக இருக்க வேண்டும். தவிற டாஸ்மாக் கடையில் கோடி கணக்கில் இலக்காக இருக்க கூடாது. அதனால் தீபாவளியையொட்டி மதுக்கடைகள் விடுமுறை அளித்து விட்டால் தமிழகத்தில் உள்ள பெண்கள் பாராட்டுவார்கள். முதல்வர் அதனை பரிசினை செய்து மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். பண்டிகை காலங்களில் ஆவது அந்த குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றார்.