கோவிலில் ஜூஸில் மயக்கம் மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருட்டு – பெண் கைது.!!

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோயில் வளாகத்தில் படுத்து தூங்கினர். அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை வள்ளி கூறியதன் பேரில் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வள்ளியையும், நகை வைத்திருந்த பையையும் காணவில்லை .இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்த வள்ளியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. அவர் ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடி உள்ளார் .அதோடு சென்னை, காஞ்சிபுரத்திலும் கைவரிசை காட்டியுள்ளார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன் அவருக்கு பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..