சுய உதவிக் குழுவில் பணம் வாங்கிய பெண் தற்கொலை..

கோவை சுந்தராபுரம் சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட், பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர்.கார்த்திக் இவரது மனைவி மனோன்மணி (வயது 32 ) இவர்  மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார் . கடந்த 2 மாதங்களாக அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த மனோன்மணி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் கார்த்திக் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.