பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது
கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் உமா தேவியின் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்கச் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றது பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து தேடி வந்த காவல் துறையினர். இந்நிலையில் அவர்கள் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது நான்கு பேரும் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வாஞ்சிநாதன் (வயது 20), பழக்கடை நடத்தி வரும் பச்சை என்ற விஜயராஜன் (வயது 19) மற்றும் கூலி வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் (வயது 20). என்பதும் பழனி, துடியலூர், மேட்டுப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் செயின் மற்றும் மொபைல் போன்கள் போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் பல வழக்குகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து தெரியவந்து உள்ளது. அவர்கள் நான்கு பேரை கைது செய்த வடவள்ளி காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.