கோவையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் கோவையில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரின் மகனும் அடங்குவார்.மகன் கைது செய்யப்பட்ட செய்தியை காவல் நிலையத்திலிருந்து அவருக்கு இன்று தெரியப்படுத்தினார்கள். அவரை நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.நான் வரமாட்டேன். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் தீர வேண்டும்.நான் அவனைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம்.
போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட மகனை பார்க்க மறுத்த பெண் எஸ்.ஐ .!
