ஓடும் பேருந்தில் பெண் பில் கலெக்டரிடம் ரூ.1லட்சம் திருட்டு..!

கோவை தெலுங்குபாளையம், பனைமரத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி அமுதா ( வயது 55 ) இவர் இடிகரை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று வசூல் ஆன பணம் ரூ 1 லட்சத்து 7ஆயிரத்தை மனிபர்சில் வைத்து காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.ரயில் நிலையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது மணி பர்சை காணவில்லை.. ரூ 1 லட்சத்து 7 ஆயிரத்துடன் மணி பர்சை யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து அமுதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்