மகளிர் உரிமை தொகை ரூ.1000… யாருக்கெல்லாம்..? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

களிர் உரிமை தொகை திட்டம் குறித்த விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கினார்.

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கூறிய வாக்குறுதிகளில் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட திட்டம் மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். இது எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தபோது அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சங்க காலத்தில் இருந்தே தாய்வழி சமூகம் தான் குடும்பத்தை வழிநடத்தியுள்ளது. அதன் பிறகு, சில பிற்போக்குத்தனத்தால் பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டார்கள். பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் இதனை தடுக்க முயன்றார்கள். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தான் தமிழகத்தில் பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. என குறிப்பிட்டார்.

தற்போது, தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள்எண்ணிக்கை இப்போது அதிகம். அரசு பணி தேர்வுகளில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகிறார்கள். இது தமிழகத்திற்கு பெருமைகுரிய விஷயம். வெளியில் சம்பாதிக்கும் ஆண்கள் பின்னால், தாய், தரம் என பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் என குறிப்பிட்டார்.

அவர்களுக்கான உதவி தொகையாக இல்லாமல், இது அவர்களின் உரிமை தொகையாக இருக்க வேண்டும் என்று தான் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் வைத்து கொண்டுவரப்பட்டது.

உலகில் சில நாடுகளில் சோதனை முறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், வறுமை பாதியாக கூறிய வாய்ப்பு உள்ளது எனவும், சிறு சிறு தொழில்கள் வளர்வதையும், குடும்ப மருத்துவ செலவுக்ளை பெண்கள் கவனித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்காக 7000 கோடி ரூபாய் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்ட முதல்வர், செல்வந்தர்கள், வருமான வரித்துறை செலுத்துபவர்களுக்கு உரிமை தொகை கொடுகாலமா என சில பெண்களிடம் கேட்டதற்கு வசதி இல்லாத ஏழை பெண்களுக்கு கொடுத்தால் தான் இத்திட்டம் முழு பயன்பெறும் என கூறினார்கள்.என முதல்வர் குறிப்பிட்ட்டார். அனைவர்க்கும் வீடு என்பது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவது. முதியோர் உதவி தொகை என்பது ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி தொகை , அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை இதுதான் திட்டத்தின் செயல்பாடு என முதல்வர் விளக்கம் அளித்தார்.

அடுத்ததாக, தகுதியான பெண்களுக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகையானது மாதம் 1000 என வங்கி கணக்கில் செலுத்தப்படும், 1கோடி மகளிர் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவர். இந்த திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.