கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 56) கூலி தொழிலாளி. இவரது உறவினர் புது சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். சம்பத் உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி பயத்தில் அழுதாள் . அந்த சிறுமியின் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து சுந்தரத்தை பிடித்து கோவை அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.