ஒடிசாவை சேர்ந்தவர் ரமேஷ் மாலிக் என்ற சந்தோஷ் மாலிக் ( வயது 25 ). இவர் கோவைப்புதூர் பக்கம் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிமெண்ட் மூட்டைகளை லிப்டில் ஏற்றி செல்லும் போது லிப்ட் திடீரென்று பழுதடைந்து ,3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்ப்பட்டது .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் . இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
3-வது மாடியில் லிப்டில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி..
