சினிமா தியேட்டர் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..

கோவை : கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் பக்கம் உள்ள சாணிவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 38) இவர் கோவை ஆர். எஸ் .புரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ராஜேஷ் என்பவருடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.. இதுகுறித்து ஆர். எஸ். புரம் போலீசில் ராஜேஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.